இப்படியே போனா எப்படிண்ணே.. ஜனவரி 12ம் தேதி ரயில்களும் நிரம்பிருச்சாம்ய்ய்யா!

Su.tha Arivalagan
Sep 14, 2023,10:38 AM IST

சென்னை: 2024 பொங்கல் பண்டிகைக்கான, ஜனவரி 12ம் தேதி தென் மாவட்ட ரயில்களுக்கான  டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய வேகத்திலேயே தீர்ந்து விட்டது.


காலை 8 மணிக்கு புக்கிங் தொடங்கியது. தொடங்கி 5 நிமிடத்திலேயே அனைத்து தென் மாவட்ட ரயில்களிலும் டிக்கெட்கள் விற்று விட்டன. தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு போய் விட்டது. 



2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி வருகிறது. இதையொட்டி ரயில் டிக்கெட்  புக்கிங் நேற்று தொடங்கியது. நேற்று முன்பதிவு தொடங்கியதுமே அனைத்து தென் மாவட்ட ரயில்களிலும் டிக்கெட்கள் முடிந்து விட்டன. வைகை எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் டிக்கெட் இருந்தது. அதேபோல இன்று ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஆன்லைனில் புக்கிங் தொடங்கியதும் சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்று விட்டன.


ஜனவரி 13-ம் தேதிக்கான ரயில்களுக்கு முன்பதிவு நாளை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கும். ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ஆம் தேதியும், ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்பு செப்டம்பர் 17ஆம் தேதியும் தொடங்கும்.


டிக்கெட் முன்பதிவை நேரில் சென்றும் செய்யலாம். ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும் பண்ணலாம்.