தமிழ்நாட்டில்.. புது ரேஷன் கார்டு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நீங்க வாங்கிட்டீங்களா?

Meenakshi
Jun 11, 2024,03:29 PM IST

சென்னை:  புதிதாக 2 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு தற்போது புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதுவரை நடைமுறையில் இருந்து வந்ததினால், புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக சுமார் 2 லட்சம் பேர் ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்துள்ளனர். காத்திருக்கும் இந்த 2 லட்சம் பேருக்கும் ரேஷன் அட்டை வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவத்துள்ளது.




நேற்று முதல் இந்த பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் கார்டு இல்லாமல் பல முக்கிய நலத் திட்டங்களை அனுபவிக்க முடியாத நிலையில் மக்கள் இருந்து வந்தனர். தற்போது ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருவதால் அவர்களும் மக்கள் நலத் திட்டங்களின் பலன்களைப் பெற முடியும்.


ரேஷன்  அட்டை வேண்டி விண்ணப்பித்த ரேஷன் அட்டை தாரர்களின் விண்ணப்பங்கள்  மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டத்திற்குரிய அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கனவே சரி பார்த்து வைக்கப்பட்ட ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.