விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் SSLV-D3 ராக்கெட்.. புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது EOS08!
Aug 16, 2024,07:30 PM IST
ஸ்ரீஹரிகோட்டா : புவி கண்காணிப்பு செயற்கோளான EOS085 ஏந்தியபடி, விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ அனுப்பிய எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக 75.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டெமோசாட் செயற்கைகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இஸ்ரோவின் SSLV-D3 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 16) காலை 09.17 மணிக்கு SSLV-D3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி, லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்