இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சம்பளம் இவ்வளவு தானா?

Aadmika
Sep 14, 2023,04:17 PM IST
டெல்லி : இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் மாத சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவலை ஹர்ஷ் கொயங்கா சமீபத்தில் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்கள் இடையே பெரும் விவாத பொருளாகி உள்ளது.

ராமா பிரசாத் கொயங்கா குரூப் அல்லது ஆர்பிஜி குரூப் நிறுவவத்தின் தலைவர் ஹர்ஷ் கொயங்கா. சுவாரஸ்யமான தகவல்கள் இவர் அடிக்கடி சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருவதால் நெட்டிசன்கள் இடையே இவர் மிகவும் பிரபலம். அப்படி இந்த முறை அவர் வெளியிட்டுள்ளது இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் மாத சம்பளம் பற்றிய தகவல்.



இஸ்ரோ தலைடர் சோம்நாத்தின் மாத சம்பளம் ரூ.2.5 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இது உண்மை தானா? அதெப்படி இவ்வளவு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் விஞ்ஞானிக்கு அரசு இவ்வளவு குறைந்த சம்பளம் தான் கொடுக்குமா? தனது அர்ப்பணிப்பான பணியால் நாட்டையே பெருமைப்பட வைத்துள்ளார். அவருக்கும் இவ்வளவு குறைவாக சம்பளம் கொடுக்க வாய்ப்பே இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நெட்டிசன் ஒருவர், அவருடைய சம்பளம் குறைந்தது ரூ.5 லட்சமாவது இருக்கும் என தெரிவித்துள்ளார். மற்றொருவர், ஒருவேளை இஸ்ரோ ஒரு தனியார் நிறுவனமாக இருந்து, நீங்கள் அதன் உரிமையாளராக இருந்தால் சோம்நாத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள்? என கொயங்காவிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த கொய்கா, ரூ.5 கோடி என பதிலளித்துள்ளார்.

இன்னும் சிலர், சம்பளம் என்பதும் பணம் சம்பாதிப்பது என்பதும் தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றோருக்கு தான் முக்கியம். ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவியல் மீதான காதல் காரணமாக சம்பளம் ஒரு பொருட்டே கிடையாது. அவர்களின் அடிப்படை தேவைகளுக்கு மட்டும் தான் இந்த பணம் என்பது என கருத்து தெரிவித்துள்ளனர்.