அடேங்கப்பா.. தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜிற்கு இவ்வளவு சம்பளமா?

Aadmika
Sep 01, 2023,10:39 AM IST
சென்னை : ரஜினியின் தலைவர் 171 படத்திற்காக டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஐந்து படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் இந்தியாவின் டாப் டைரக்டர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய் நடித்துள்ள லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். அக்டோபர் 19 ம் தேதி ரிலீசாக உள்ள லியோ படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.



இதற்கிடையில் அவரது அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கி உள்ளது. அடுத்து அவர் யாரை இயக்க போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 படத்தை தான் இயக்க போகிறார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

ரஜினி தற்போது கமிட்டாகி உள்ள, டி.ஜே.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தை முடித்த பிறகு, தலைவர் 171 படத்தின் வேலைகளை லோகேஷ் கனகராஜ் துவக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்க போகிறார் என்பதை விட, அந்த படத்திற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

லேட்டஸ்ட் தகவலின் படி, தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜிற்கு ரூ.60 கோடிகள்  சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இதற்கு முன் டைரக்டர் அட்லீ தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டைரக்டராக இருந்து வந்துள்ளார். இவர் ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு அடுத்ததாக எடுக்க உள்ள படத்திற்காக ரூ.50 கோடி சம்பளம் அட்லீக்கு பேசப்பட்டுள்ளதாம். தற்போது லோகேஷ் கனகராஜ் அவரையும் மிஞ்சி விட்டார்.

ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டைரக்டர் என்ற பெயரை மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் டைரக்டர் என்ற பெயரையும் லோகேஷ் கனகராஜ் பெறுவார்.