என்னா படம்ய்யா... ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடும்.. இறுகப்பற்று!

Meenakshi
Oct 11, 2023,02:03 PM IST
சென்னை: இறுகப் பற்று படம் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியுள்ளது. இதனால் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் சார்பாக ஜஸ்டின் பிரபாகர் தயாரிப்பில் அக்டோபர் 6ம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் இறுகப்பற்று. யுவராஜ் தயாளன் இயக்கத்தில்  விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார். 



திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் மற்றும் அதனை சரிசெய்வதற்கான வழிகளைப் பற்றி தோழமை உறவுடன் எடுத்துக்கூறுகிறது இறுகப்பற்று. இணைய வலைதளங்கள்  மற்றும் பொது இடங்களிலும் இப்படம் குறித்த  நல்ல விமர்சனங்கள் வருவதே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாகும். வார இறுதி நாட்களை விட  திங்கட்கிழமையில் இப்படத்தை காண மக்கள் திரண்டு வருகின்றனர். 

இது குறித்து ட்வீட் செய்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு முதல் நாள் வசூலை விட 4வது நாள் வசூல் அதிகமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  இப்படம் அதிக இடங்களில் திரையிடப்பட்டுள்ளதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனலாம். பார்வையாளர்களின் அசைக்க முடியாத ஆதரவையும் இப்படத்திற்கு வரும் கூட்டம் எடுத்துக்காட்டுகிறது. 



தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், இறுகப்பற்று திரைப்படத்துக்குக் கிடைத்துள்ள அபாரமான வரவேற்பும், பார்வையாளர்கள் திரைப்படத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளதும்  எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இந்த வெற்றி சிறிய, கதாபாத்திரம் சார்ந்த, ஆழமான கதைகளின் திறனை நிரூபிக்கிறது. வெற்றி என்பது பிரம்மாண்டத்தில் மட்டுமல்ல, கதை சொல்லும் கலையிலும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. இந்த வெற்றி எங்கள் ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலனே என்று கூறியுள்ளார். 



இப்படம் குறித்து இயக்குனர் யுவராஜ் தயாளன் கூறுகையில், இறுகப்பற்று போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவது சவாலான ஆனால் நிறைவான அனுபவமாக இருந்தது. மேலும் இது பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிய பத்திரிகைகள் மற்றும் ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.



நீங்க படம் பார்த்துட்டீங்களா.. இல்லைன்னா பார்த்து என்ஜாய் பண்ணுங்க