இந்திய திரைப்பட அகாடமி விருது விழா… சிறந்த இயக்குனர் மணிரத்னம்... சிறந்த நடிகை சமந்தா
அபுதாபி: அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழங்கும் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது மணிரத்தினத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது நானிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் யாஸ் பே வாட்டர் ஃபிரண்டின் ஒரு பகுதியான எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்த விழழழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
தென்னிந்திய நடிகர்களை சிறப்பிக்கும் விதமாக செப்டம்பர் 27,28,29 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் திரை பிரபலங்கள் பாலகிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான், ராணா டக்குபதி, வெங்கடேஷ் டக்குபதி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாகித் கபூர், அனன்யா பாண்டே, கீர்த்தி சனோன், கரண் ஜோகர், ஐஸ்வர்யா ராய், ஜாவித் அக்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று தொடங்கிய இந்த விழா நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
இந்த விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னம் பெற்றுக் கொண்டுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை தசரா படத்திற்காக தெலுங்கு நடிகர் நானி பெற்றார்.இந்திய சினிமாவில் சிறந்த சாதனையாளர் விருதை சிரஞ்சீவியும், இந்திய சினிமாவின் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகை என்ற விருது சமந்தாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்