சாதனை நாயகன் சச்சின்... டெண்டுல்கர் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ?

Aadmika
Apr 24, 2023,01:50 PM IST

மும்பை : கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவர் ஏப்ரல் 24 ம் தேதியான இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சச்சினின் கிரிக்கெட் சாதனைகள், திறமைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.



* சச்சினையும், கிரிக்கெட் விளையாட்டில் அவர் செய்த சாதனையையும் உலகமே கொண்டாடி வருகிறது. ஆனால் சச்சினுக்கு கிரிக்கெட்டை விட பிடித்த விளையாட்டு டென்னிஸ் தானாம். சிறு வயதில் இருந்தே டென்னிஸ் வீரர் ஆக வேண்டும் என்பது தான் சச்சினின் ஆசையாக இருந்துள்ளது.

* உலகில் உள்ள அத்தனை கிரிக்கெட் வீரரும் தங்களின் வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பது, சச்சினின் சாதனையை எட்டி பிடிக்க வேண்டும். குறைந்த பட்சம் சமன் செய்யவாவது வேண்டும் என்பது தான். பலரும் அவரை ரோல் மாடலாக நினைக்கிறார்கள். ஆனால் சச்சின் தனது ரோல் மாடலாக நினைப்பது அவரது தந்தை ரமேஷ் டெண்டுல்கரை தான்.

* இதுவரை அதிக முறை மேன் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கிய ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் மட்டும் தான். ஒருநாள் போட்டிகளில் 62 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 9 முறையும் மேன் ஆஃப் தி மேட்ச் விருதினை அவர் வாங்கி உள்ளார்.



* உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக முறை சதங்கள் அடித்தவரும், அதிகமான முறை அரை சதங்கள் அடித்தவரும் சச்சின் மட்டும் தான்.

* சச்சின், கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட மிக வேகமாக 11,000 ரன்களை கடந்த கிரிக்கெட் என்ற சாதனையை இதுவரை எந்த ஒரு வீரரும் முறியடிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர் லாரா மட்டுமே அந்த சாதனையை சமன் செய்துள்ளார். ஆனால் அவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இதுவரை சச்சினின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை.

* சச்சின் டெண்டுல்கர், 2013 ம் ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் கிரிக்கெட் உலகில் வீரர்களிடமும், ரசிகர்கள் இடமும் இப்போது வரை சச்சின் மீதான மோகமும், ஈர்ப்பும் குறையவில்லை. 

* தனது 14வது வயதிலேயே சாதனையை பயணத்தை துவக்கியவர் சச்சின். மிக இளம் வயதில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் லிட்டில் மாஸ்டர் சச்சின் தான்.

* சச்சின் பயங்கரமாக சென்டிமென்ட் பார்க்கக் கூடியவராம். மேட்ச்க்காக pad அணியும் போது கூட முதலில் இடது பக்கம் அணிந்த பிறகு தான், வலது பக்கம் அணிவாராம்.



* தூக்கத்தில் உலறும் பழக்கம், தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இரண்டுமே சச்சினுக்கு உண்டு.

* பாம்பே ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடி போது, ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது பாட புத்தகங்களை எடுத்து வந்து படித்து வந்தார் சச்சின்.

* அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போதிலும் 6 மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகளை வென்று சாதனை படைத்தார் சச்சின்.

* இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஒரே இளம் வயது வெளிநாட்டு கிரிக்கெட் வீரரும் சச்சின் டெண்டுல்கர் தான்.

* 1990 களில் மட்டும் சர்வதேச போட்டிகளில் இருந்து 23 முறை டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் தான்.

* இந்திய விமானப்படையில் கெளரவ பதவி வழங்கப்பட்ட முதல் விளையாட்டு வீரர் சச்சின் தான்.

* 1995 ம் ஆண்டு ரோஜா படத்தை பார்க்க மாறு வேடத்தில் தியேட்டருக்கு சென்றார் சச்சின். ஆனால் ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு பிடித்ததால் அவரால் முழு படத்தையும் பார்க்க முடியாமல் போனது.

* சச்சின் டெண்டுல்கரின் ஃபேவரைட் கார் ஃபெராரி தான். இந்த காரை அவரது காதல் மனைவி அஞ்சலி ஓட்டுவதற்கு கூட சச்சின் தடை விதித்துள்ளார்.