தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில்.. பூஜ்ஜிய நிழல் தினம்.. விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை எப்படி பார்ப்பது.. பொதுமக்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கிக் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ..
என்பதையும் விளக்கிக் கூறியுள்ளனர்.
நிழல் தினம் என்றால் என்ன?
நிழல் இல்லா தினம் அல்லது பூஜ்ஜிய நிழல் தினம் என்பது பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது சூரிய ஒளிக் கதிர்கள் செங்குத்தாக விழும். அப்படி சூரிய ஒளி கதிர்கள் ஒரு பொருளின் மீது விழும்போது அந்த ஒளிக்கதிர்கள் தரையில் விழாது. இது ஒரு அதிசயமான நிகழ்வு. இது வருடத்திற்கு இரண்டு முறை மகர ரேகைக்கும், அட்ச ரேகைக்கும் இடையே இருக்கும் இடங்களில் ஏற்படும். இந்த பூஜ்ஜிய நிழல் தினம் இந்த வருடம் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் இந்த தினத்தில், இது போன்ற அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
.
இந்த நிலையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்து தங்களை சுற்றி உள்ள பொது மக்களுக்கும், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், மாணவர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கிக் கூறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி ஆகியோர் மாணவர்களை உற்சாகப்படுத்தி அறிவியல் உண்மைகளை விளக்கினார்கள்.
இதுகுறித்து இப்பள்ளி மாணவிகள் கனிஷ்கா, முகல்யா, ரித்திகா ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் விளக்கிக் கூறுகையில்,
இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் இம் மாதம் ஏப்ரல் 15 ம் தேதி தேவகோட்டை பகுதியில் மதியம் 12 மணி 15 நிமிடங்களில் நடைபெறும்.பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும்.சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் . அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும். இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் அன்று நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது என்று செயல்முறை செய்து காண்பித்து விளக்கி கூறினார்கள்.