சொமாட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு செம புத்தாண்டு.. ஒரே நாள் இரவில் ரூ. 97 லட்சம் டிப்ஸ்!
மும்பை: புத்தாண்டு தினமான டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 1ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சொமாட்டோ நிறுவனத்திலிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவுகளைப் பெற்றுக் கொண்டார், உணவு கொண்டு வந்த ஊழியர்களுக்கு டிப்ஸாக ரூ. 97 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
இந்தத் தகவலை சொமாட்டோ நிறுவன உரிமையாளர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளனர். நன்றி இந்தியர்களே நீங்கள் எங்களது டெலிவரி ஊழியர்களுக்குக் கொடுத்த டிப்ஸ் ரூ. 97 லட்சத்தைத் தாண்டி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த தகவலை பலரும் வரவேற்றுள்ளனர். உங்களது ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு டிப்ஸ் பொருத்தமானதே. இந்தத் தகவலால் சூப்பர் ஹேப்பி என்று பலர் கருத்திட்டுள்ளனர்.
இதேபோல இன்னொரு தகவலையும் பகிர்ந்துள்ளார் கோயல். அதாவது 2015, 16, 17, 18, 19, 20 ஆகிய ஆண்டுகளில் புத்தாண்டு சமயத்தின்போது ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் மொத்த அளவுக்கு 2023 புத்தாண்டின்போது சொமாட்டோ மூலமாக மக்கள் ஆர்டர் செய்துள்ளனராம். எதிர்காலம் குறித்து மிகவும் சிலிர்ப்பாக உள்ளதாகவும் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வருடா வருடம் மிகப் பெரிதாக போய்க் கொண்டிருக்கிறது. முன்பை விட இப்போது அதிக அளவிலான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பார்ட்டிகள் அதிகரித்து விட்டது. விருந்தோம்பலும் அதிகரித்து விட்டது. குறிப்பாக சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்றவை வந்த பிறகு இது அதிகரித்து விட்டதுஎன்று சொல்ல வேண்டும்.