இப்பவே தாங்கல... இன்னும் 2 மாதங்களுக்கு வெயில் வச்சு செய்யுமாம்...மக்களே உஷார்
சென்னை: இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். இது தவிர, நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்க ஆரம்பித்து விடும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கல் அதிகரித்து காணப்படுகிறது. இப்பவே கண்ண கட்டுதே என்பது போல வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதையே தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி, திணறி வருகின்றனர். இதனால் மக்கள் மதிய வேலைகளில் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்வது என மக்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், இதற்கிடையே தென் தமிழகப் பகுதிகளில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கத்தால் அனல் இன்னும் அதிகமாக இருக்குமாம். நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாம். தமிழகம்,கேரளா, கடலோர ஒடிசா மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் சந்திக்க தான் வேண்டும் மக்களே.. பி கேர் ஃபுல்!