இனி INDIA Vs BJP.. பெங்களூர் கூட்டத்தில் அதிரடி காட்டிய எதிர்க்கட்சிகள்!

Aadmika
Jul 18, 2023,09:15 PM IST

பெங்களூரு : கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கூட்டணியின் பெயர் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் விரைவில் நடக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.


2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக.,வை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் எதிர்க்கட்சின் இரண்டாவத கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் 26 கட்சிகள் கலந்து கொண்டன.


எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர், தலைவர் உள்ளிட்டவைகளை முடிவு செய்ய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு புதிய பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளனர். I-N-D-I-A - Indian Developmental Inclusive Alliance. அதாவது இந்திய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி ஆகும். எதிர்க்கட்சிகளின் இரண்டு நாள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதனை தெரிவித்தார்., இந்தியா




மேலும் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அவர் தெரிவித்தார். அவை, 


1. 2024 லோக்சபா தேர்தல் குறித்த திட்டங்களை வகுப்பதற்காக 11 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட உள்ளது.


2. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும். அதில் கமிட்டி உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள். அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


3. நாங்கள் அனைவரும் மோடியால் ஒன்று சேர்ந்துள்ளோம்.


4. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில்தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் பாஜக தலைடர்கள் பழைய கூட்டணிகளை தேடி ஒவ்வொரு மாநிலமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.


5. இந்த கூட்டத்தின் நோக்கம் எங்களுக்காக நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவது கிடையாது. ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை பாதுகாப்பதே.


6. அரசு இயந்திரங்கள் ஒவ்வொன்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்பட்டு வருகிறது.


ராகுல் காந்தி கருத்து :


கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இது பாஜக.,வின் கொள்கைக்கு எதிரான போராட்டம். இங்கு யாருக்கும் இந்தியாவின் கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்தும் எண்ணம் கிடையாது. இந்தியாவின் குரலை மீண்டெடுப்பதற்கான போராட்டம் இது. இந்தியாவில் பொருளாதார ஏற்ற இறக்கத்தை பிரதம் மோடி உருவாக்கி வருகிறார். இந்தியாவின் செல்வம் அவைத்தும் ஒரு சிலவரின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. அதுவும் பாஜக மற்றும் பிரதமர் மோடி தேர்வு செய்த ஒரு சிலரின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.