சிறுமி கொலை.. புதுச்சேரியில் இன்று பந்த்.. அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு

Meenakshi
Mar 08, 2024,11:13 AM IST

புதுச்சேரி:  புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலையை கண்டித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடைபெறுகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது புதுச்சேரி.


புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே உள்ள சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமியை கொலை செய்த குற்றவாளிகள் சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையில் வீசி உள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 




அப்பகுதியை சேர்ந்த கருணாஸ் என்ற இளைஞன் (19) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விவேகானந்தன் (59) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் கோபத்தால் கொந்தளித்து சிறுமி கொலை வழக்கில் நீதி கேட்டு இளைஞர்கள், பெண்கள், சமூக  ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு புதுச்சேரி கடற்கரை மற்றும் முந்தியால் பேட்டை உள்ளிட்ட தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.


இது தவிர புதுச்சேரி கடற்கரை அருகே சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து சிறுமியை கொலை செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என  வலியுறுத்தி போராட்டம் நடத்தி நடத்தினர்.


இந்நிலையில், புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது. பொது தேர்வு எழுதுவோர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பந்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 




காலை 6 மணி முதல் பந்த தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பந்தில் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர்,  சட்டப்பேரவை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், காவல் நிலையம் முற்றுகை, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல் என பல்வேறு தரப்பினர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


கொலைக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் இன்று பந்த் போராட்டம் முழு அளவில் நடைபெற்று வருகிறது.