களை கட்டுது.. வந்துருச்சு திருவிழா.. இன்னிக்கு காப்புக் கட்டு.. எத்தனை பேர் பங்கேற்கிறாங்க தெரியுமா?

Aadmika
Mar 16, 2024,02:04 PM IST

டெல்லி: தேர்தல் திருவிழா இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. லோக்சபா தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சில புள்ளிவிவரங்களை இப்போது பார்ப்போம்.


நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.  இதில் எஸ்சி தொகுதிகள் 84 ஆகும், எஸ்டி தொகுதிகள் 47. தனித் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 131 ஆகும். பொதுத் தொகுதிகளின் எண்ணிக்கை 412 ஆகும்.




நாட்டிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட டாப் 5 மாநிலங்கள்


உத்தரப் பிரதேசம்  - 80

மகாராஷ்டிரா - 48

மேற்கு வங்காளம் - 42

பீகார் - 40

தமிழ்நாடு - 39


நாடு முழுவதும் உள்ள மொத்த வாக்காளர்கள் - 96,88,21,926. இதில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை  2.63 கோடி ஆகும். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை  49,72,31,994, பெண் வாக்காளர்கள் 47,15,41,888 ஆவர். மூன்றாம் பாலின வாக்காளர்கள்  48,044 பேர் உள்ளனர்.


மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை 88 லட்சத்து 35 ஆயிரத்து 449 பேர் ஆவர். 18 முதல் 19 வயதுக்குள் இருக்கும் வாக்காளர்கள் 1 கோடியே 84 லட்சத்து 81 ஆயிரத்து 610 பேர் ஆவர். 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் - 19,74,37,160 ஆவர்.


80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் 1,85,92,918 ஆவர். 100 மற்றும் அதற்கு மேல் வயதுடைய வாக்காளர்கள்  இந்தியாவில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 791 பேர் உள்ளனர்.