நான் கருணாநிதி பேரன்.. ஸ்டாலின் மகன்.. மன்னிப்பு கேட்க மாட்டேன்.. உதயநிதி ஸ்டாலின்!

Su.tha Arivalagan
Nov 06, 2023,06:35 PM IST
சென்னை: நான் கருணாநிதியின் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். சனாதன தர்மம் குறித்து அம்பேத்கர் , பெரியார் பேசியதை விட நான் தவறாக பேசி விடவில்லை. எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று பேசியுள்ளார் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞர் அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களுக்கு நூல்லினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பொய் செய்தி, பேக் நியூஸ் போட்டு இதை வைத்து தான் கட்சியே நடத்திக்கிட்ட இருக்காங்க. நான் பேசாததையெல்லாம் பேசினேன்னு சொல்லி. அதை பொய்யா பரப்பி, ஒட்டு மொத்த இந்தியாவும் அதை பேசி, என் மேல கேஸ் போட்டாங்க. நீதி மன்றத்தில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னாங்க.



மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. நான் பேசியது பேசியது தான். நான் சென்ன கொள்கையில் உறுதியாக இருப்பேன். நான் கருணாநிதியின் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

நீட் தேர்வு ரத்து என்பது உதயநிதியோட பிரச்சனை கிடையாது. திமுகவோட பிரச்சனையும் கிடையாது. ஒட்டு மொத்த தமிழகத்தின் பிரச்சனை. தமிழ்நாட்டு மாணவர்களின் பிரச்சனை. என் தனிப்பிரச்சனை கிடையாது. எதிர் கட்சியாக இருக்குறப்பையும் சரி, ஆளுங்கட்சியாக இருக்குறப்பையும் சரி  நீட் தேர்வை ரத்து செய்யனும்னு தான் போராடுறோம். அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு கிடையாது.

பாஜக இருக்குற அணி தான் அமாலாக்க துறை , வருமானதுறை. பாஜக செல்லறத செய்யிற அணி தான் இவங்க எல்லாம். அதிமுகவை பயமுறுத்தியதை போன்று திமுகவை மிரட்ட முடியாது என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அதேபோல உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, அம்பேத்கர் பேசியதை விட, பெரியார் பேசியதை விட நான் தவறாக எதுவும் பேசி விடவில்லை. நான் சொன்னது சரிதான்.. அதிலிருந்து எந்த மாற்றமும் இல்லை. நான் அமைச்சராக இருப்பதை பெரிதாக நினைக்கவில்லை. இதெல்லாம் வரும் போகும், அடிப்படையில் நாம் முதலில் மனிதனாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.