சுகர் பக்கம் தலை வச்சுக் கூட படுக்கக் கூடாது.. அதுக்கு??.. பார்ரா!
Aug 25, 2023,04:35 PM IST
- மீனா
சென்னை: வேலையெல்லாம் பார்த்து ரொம்ப டயர்ட் ஆகிட்டீங்களா.. கவலையை விடுங்க பாஸ்.. கலகலன்னு உங்கள சிரிக்க வைப்பதற்காகவே சுடச் சுட நறுக்குன்னு நாலு ஜோக்கோட வந்திருக்கோம்.. வாங்க ஜாலியா சிரிச்சுட்டு இந்த நாளை இனிமையா முடிப்போம்.
நபர் 1: என் உறவினர் ஒருத்தர் ரொம்ப முடியலன்னு சொல்லி டாக்டர் கிட்ட போய் செக் அப் பண்ண போனாரு.
நபர் 2: அப்படியா டாக்டர் என்ன சொன்னாரு?
நபர் 1: உங்களுக்கு சுகர் இருக்குது .இனிமேல் சுகர் பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார் .
நபர் 2: பாவம் . அப்புறம் என்ன பண்ணாரு?
நபர் 1: அதனால சுகர் டப்பாவை கால் கீழே வைத்து தான் படுக்கிறார்
--
கணவன்: எப்ப பாரு ஏதாவது பங்ஷனுக்கு போனா புது புது நகையா கேக்குற பழைய நகையை போட்டு போனா என்ன?
மனைவி: நம்ம சொந்தக்காரங்க ஃபங்ஷனுக்கு ஒரே நகையா போட்டு போனா உன் கணவர் வேற வாங்கி தர மாட்டாரான்னு கேக்குறாங்க. உங்க பேரு கெட்டுடக் கூடாதுல்ல.. அதனாலதான், புது நகை கேட்கிறேன்
கணவன்: என்னையும் தான் கேக்குறாங்க அதுக்கு நான் என்ன பண்றது.
மனைவி: உங்களை என்ன கேக்குறாங்க நீங்க தான் எந்த நகையுமே போட மாட்டீங்களே.
கணவன்: அது இல்ல, எல்லா ஃபங்ஷனுக்கும் ஒரே மனைவியையே கூட்டிட்டு வரேனு கேக்குறாங்க. அதுக்காக ஒவ்வொரு ஃபங்ஷனுக்கு ஒவ்வொரு கல்யாணமா பண்ண முடியும்.
மனைவி:😡
--
மனைவி: கல்யாணம் ஆன புதுசுல நீங்க என்னை பால்கோவா, ரசகுல்லா, பாசந்தி அப்படின்னு என்னை பாசமாக கூப்பிடுவீங்க .
கணவன்: ஆமா , இப்ப என்ன அதுக்கு?
மனைவி: இப்ப எல்லாம் நீங்க அந்த மாதிரி என்னை கூப்பிடுறது இல்லையே .
கணவன்: அதுக்கு எல்லாம் எக்ஸ்பயரி டேட்னு ஒன்னு இருக்குன்னு தெரியாம கூப்பிட்டேன்மா. மன்னிச்சிரும்மா.
மனைவி: என்னாது 😡
--
ரமேஷ்: ஒருத்தர் ரொம்ப நாள் பார்க்காமல் இருந்த தன் நண்பன் வீட்டுக்கு போறாரு
சுரேஷ்: சரி போய் என்ன பண்ணாரு?
ரமேஷ்: அவர் நண்பர் வீட்டுல தண்ணி பற்றாக்குறையினால் போர்வெல் போட்டுக்கிட்டு இருந்தாங்க. உடனே இவரு தன் வாட்சை கழட்டி குழிக்குள் போட்டுட்டார்.
சுரேஷ்: வாட்ச் ஏன் போட்டாரு?
ரமேஷ்: ஏன்னா கடைக்காரன் சொன்னானா இது வாட்டர் ப்ரூப் வாட்ச் என்று அதான் தண்ணி இருக்கா இல்லையா என்று ப்ரூவ் பண்னுமுனு போட்டாராம்.