Jokes... காசைக் கொடுங்க.. போய்ட்டு வந்துர்றேன்!
Aug 21, 2023,01:02 PM IST
- மீனா
கணவன்: ஏம்மா துணி எடுக்க போகலையா?
மனைவி: (என்ன அவராவே வந்து கேக்குறாரு. ஏதோ சர்ப்ரைஸ் இருக்கும் போலயே).. இந்தா வந்துடறேங்க.. ஒரு நிமிஷம்.
கணவன்: (இப்ப என்ன சொன்னேன்னு இவ்ளோ சந்தோசமா போறா?!"
மனைவி: நான் கிளம்பிட்டேங்க... பணத்தை எடுங்க.. போய்ட்டு வந்துடறேன்..!
கணவன்: பணமா.. எதுக்கு எங்க போற..?.
மனைவி: நீங்க தானே கேட்டீங்க துணி எடுக்க போகலையான்னு?
கணவன்: அடி இவளே.. மழை வர்ற மாதிரி இருக்கு மாடியில் போட்ட துணியை எடுக்க போகலையான்னு தான் கேட்டேன்.
மனைவி: ????
--
மாமனார்: மாப்ளை வசந்தி எங்கே?
மருமகன்: கிச்சன்ல சாப்பாடு எடுத்து வச்சுக்கிட்டு இருக்கா மாமா. இப்ப வந்துருவா .
மாமனார்: சரி சரி வரட்டும் மாப்ளை.
மருமகன்: இந்தாங்க மாமா நல்லா சாப்பிடுங்க.
மாமனார்: (ஆஹா! என்ன அருமையான சாப்பாடு).. என் பொண்ணு அவங்க அம்மாவை விட நல்லா சமைச்சி இருக்கிறா மாப்ளை. நான் அப்பவே சொன்னேன் என் மனைவிட்ட. ஒரு நாள் என் பொண்ணு உன்ன விட நல்ல சமைப்பா பாருன்னு. அவங்க அம்மா தான் நம்பவே இல்லை. இப்ப பாருங்க.
மாப்பிள்ளை: மாமா இது ஸ்விக்கில ஆர்டர் பண்ண சாப்பாடு.. சாப்டுங்க!
மாமனார்: (அடடா... கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ).
--
பாலு: டேய் நில்லு. எதுக்கு உன் அப்பா உன்னை அடிக்க துரத்தி வராரு.
மணி: ஒரு சந்தேகம் கேட்டேன் .அதுக்கு தான் துரத்திகிட்டு வர்றாரு.
பாலு: சந்தேகம் கேட்டதுக்கு எதுக்குடா துரத்துறாரு?. அப்படி என்னடா கேட்ட?
மணி: மிளகாய் பொடி எதிலிருந்து வருது? .
பாலு: மிளகாயிலிருந்து இருந்து வருது.
மணி: மல்லி பொடி எதிலிருந்து வருது?
பாலு: இது தெரியாதா மல்லியிலிருந்து வருது.
மணி: சுக்குப்பொடி எதிலிருந்து வருது?
பாலு: சுக்குல இருந்து தாண்டா வருது.
மணி: அப்போ ,பல்பொடி பல்லுல இருந்து தானே வரும். யார் பல்லில் இருந்து வருதுன்னு கேட்டேன் அதுக்கு தான் அடிக்க வர்றார்.
பாலு: அடப்பாவி!
--
மகன்: இந்த கணக்கை இவ்வளவு சீக்கிரத்தில் சால்வு பண்ணிட்டீங்களே.
அப்பா: ஏன் மகனே இவ்வளவு ஆச்சரியப்படுற!
மகன்: இது ரொம்ப கஷ்டமான கணக்குப்பா அதனாலதான் சொன்னேன்.
அப்பா: ஓ அப்படியா!
மகன்: ஆமாம்பா உங்களுக்கு இருக்கிற டேலண்டுக்கு நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது.
அப்பா: உனக்கு தெரியுது உங்க அம்மாவுக்கு தெரியலையே.
மகன்: ஏன் அப்படி சொல்றீங்க?
அப்பா: ஃப்ரெண்ட்ஸோட வெளில போறேன்னு சொன்னதுக்கு, அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம். நீங்க இங்க தான் இருக்கணும்னு சொல்லிட்டா டா மகனே, உங்க அம்மா.
மகன்: ????