தழையத் தழைய சேலை கட்டி.. வெயிட்.. அதுக்கு முன்னாடி இதைப் பாருங்க!

Meena
Sep 14, 2023,07:33 AM IST
- மீனா

எல்லா பெண்களுமே ஒரே மாதிரி பாடி  ஷேப்பில் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு தனி பாடி ஷேப் இருக்கும் என்று நாம் முன்னரே பார்த்தோம் . இப்பொழுது உங்களுடைய பாடி ஷேப் என்ன என்று நீங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதுக்குப் பிறகும் நாம ஏன் வெயிட் பண்ணனும்.. எந்த பாடி ஷேப் வகையில் வருகிறீர்கள் என்று தெரிந்தாச்சுல்ல.. அடுத்து உங்களுடைய ஷேப்பிற்கு ஏற்ற மாதிரி எப்படி சேலை செலக்ட் பண்ணி கட்டலாம் என்று பார்க்கலாம். 



பொதுவாக நமக்கு எந்த டிரஸ் பிடிக்குமோ அதை நாம் தாராளமாக அணியலாம். ஆனால் நம்முடைய பாடி ஷேப்பிற்கு ஏற்ற விதத்தில் அந்த டிரஸ் அமைந்தால் இன்னும் பாந்தமாக, அழகாக, கூடவே பொருத்தமாகவும் இருக்கும். இன்னும் கூடுதல் அழகாக தெரிவார்கள். அதுபத்தித்தான் இன்னிக்குப் பார்க்கப் போறோம்.

ஆப்பிள்  ஷேப் பாடி டைப்:

இந்த பாடி ஷேப் உள்ளவர்களின் மெசர்மென்ட் சோல்டர், செஸ்ட், வெய்ஸ்ட் இவற்றின் சுற்றளவு எடுத்து வைத்திருப்போம் அல்லவா. இவை மூன்றும் ஒரே அளவில் தான் இருக்கும். எப்படி என்றால்  வட்ட வடிவமாக , அப்பர் பகுதி பெரிதாகவும், லோயர்  பகுதி நார்மலாகவும் இருக்கும். இப்படி உள்ளவர்கள் தன்னுடைய முழு கவனத்தையும் அப்பர் பாடி பார்ட்டில் தான் செலுத்த வேண்டும். பார்டர் பெரிதாக உள்ள  சேலைகள் ஹெவி வொர்க் சாரி, டிசைனர் சாரீஸ், பெரிய பார்டர் உள்ள சில்க் சாரீஸ் , காட்டன் சில்க் சாரி ஆக பார்த்து செலக்ட்  பண்ணலாம். அதற்கு ஏற்ற மாதிரி பிளவுஸ்கள் கிராண்டாக இருந்தால் நல்லது.



உதாரணமாக எம்பிராய்டரி ஒர்க், ஆரி ஒர்க், பேட்ச் ஒர்க் போன்றவை இருந்தால் இன்னும் அழகாக தெரியும். இப்படி நீங்கள் அணியும் போது உங்களை அழகாக காட்டும். சாரீஸ் சிம்பிளாக இருக்கும் பட்சத்தில் பல்லு பகுதி டிசைன்ஸ் உள்ள மாதிரி இருந்தால் நல்லது. இந்த மாதிரி சேலைகளுக்கு  மேக்சிமம் ஹெவி வொர்க் ப்ளௌஸ் அணியலாம். அது இன்னும் உங்களை அழகாக காட்டும்.

பியர் சேப் பாடி டைப்:

இந்த வகை பாடி ஷேப் உள்ளவர்களின் அளவுகள், அப்பர் பகுதி குறுகியதாகவும், லோயர் பகுதி அதிகமாகவும் இருப்பது போல் தெரியும். இவர்களின் ஷேப் பார்ப்பதற்கு ட்ரையாங்கிள் மாதிரி இருக்கும். அப்பர் பகுதி சிறியதாக இருப்பதினால் அதில் தான்  கவனம் செலுத்த வேண்டும். மேலும் லோயர் பகுதி பெரிதாக இருப்பதினாலும் அதில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தினால் உங்களுடைய பாடி ஷேப் ஈவனாக இருப்பது போல் லுக் கொடுத்கும். இந்த பாடி ஷேப் உள்ளவர்கள் திக்கான மெட்டீரியலில் சாரி அணியாமல், சார்ஜெட், ஷிபான், லெனின் போன்ற மெட்டீரியல் உள்ள சாரீஸை அணியலாம். 



இன்ஸ்கர்ட் ஷேப் வியராக இருந்தால்  அது உங்களை கொஞ்சம் ஸ்லிம்மாக காட்டும். சாரி ஸ்பிளீட் வைக்கும் போது பிராடாக வைத்தால், மேலும் கீழும் ஒரே மாதிரி தெரியும். அதே மாதிரி பிளவுஸ் சிம்பிளாக இருந்தாலும் பிளவுஸ் கையின் டிசைன்ஸ் தனியாக தெரியும் அளவிற்கு இருந்தால் நல்லது. ஸ்லீவ், பஃப் ஸ்லீவ், ரஃபில் ஸ்லீவ்,கேப் ஸ்லீவ் போன்று விதவிதமான டிசைன்ஸ் வர மாதிரி இருந்தா நல்லா இருக்கும். 

இன்வெர்ட்டர் ட்ரையாங்கிள் பாடி டைப்:

இந்த பாடி டைப் என்பது  அப்படியே டையங்கிள் ஷேப்பிற்க்கு நேர் எதிராக இருக்கும்.
ஏனென்றால் அப்பர் பகுதி பெரியதாகவும் லோயர் பகுதி  குறுகியதாகவும் இருக்கும். அதனால் ட்ரையாங்கிள் பாடி ஷேப் பிற்க்கு எப்படி எல்லாம் சாரி செலக்ட் பண்ணலாம்  என்று தெரிஞ்சுகிட்டோமோ அதையெல்லாம்  இங்கு செய்யக்கூடாது. சோல்டர் பகுதி அகலமாகவும் ,ஜெஸ்ட் வேஸ்ட், கிப் போன்ற பகுதி வரவர குறுகி இருக்கும். அதனால் இந்த பாடி ஷேப் உள்ளவர்கள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியது லோயர் பாடிபாட்டிற்கு தான். 



சோல்டர் அகலமாக இருப்பதினால் , சாரீஸ் செலக்ட் பண்ணும்போது திக்கான துணியாக பார்த்து செலக்ட் பண்ணவும். அப்போதுதான் அப்பர்,லோயர் பார்ட் பகுதி இரண்டுமே ஈக்வாலாக தெரியும். ஆர்ட் சில்க் சாரி, டிசைனர் சாரி, காட்டன் சாரி போன்ற இந்த மாதிரி சாரீஸ்களை செலக்ட் பண்ணலாம் .ஆனால் பார்டர் இல்லாமல் ,இல்லை என்றால் சின்ன பார்டர் உள்ள மாதிரி சாரீஸை செலக்ட் பண்ணினாலும் இன்னும் அழகாக தெரிவீர்கள்.

ஸ்லீவ்வை பொறுத்த வரையில் எல்போ அளவு அல்லது முக்கால் கை அளவு உள்ள ப்ளவுஸ் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆனால் சோல்டர் பகுதி அகலமாக இருப்பதினால் பிளவுஸ்களில் அதிகப்படியான வேலைபாடுகள் இல்லாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் சோல்டர் பகுதி அகலமாக இருப்பதினால் அதிகம் வொர்க் வைத்த பிளவுஸ்களை அணியாமல் சிம்பிளான பிளவுஸ்களை அணியும் போது சோல்டர் சற்று குறுகியதாக காட்டும் . ஏனென்றால் ஹெவி வொர்க் பிளவுஸ் அணியும்போது இன்னும் உங்களுடைய சோல்டர் பிராடாகப் தெரிய வாய்ப்பு இருக்கு.

ஆனால் பிளவுஸ்களில் சிம்பிளான பைப்பிங், பேட்ச் ஒர்க் போன்ற சிம்பிளான  டிசைன்ஸ் செய்து அணியலாம் அது இன்னும் அழகாக தெரியும். சாரீஸ் கட்டும்போது மேல்பகுதியில் பிளிட் சிறிதாக வைக்க வேண்டும் . அதேபோல் லோயர் பகுதியில் பெரிய பிளிட்டாக வைத்து  கட்டும்போது அப்பர் மற்றும் லோயர் பகுதி ஒரே மாதிரி ஈவனாக தெரியும். ஏற்கனவே லோயர் பகுதி சிறியதாக இருப்பதினால் போன்ற இன்ஸ்கர்ட் எல்லாம் பயன்படுத்த வேண்டாம். நார்மல் காட்டன் இன்ஸ்கர்ட் பயன்படுத்தினால் கீழ்பகுதி, மேல் பகுதியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரே மாதிரி இருப்பது போல் காட்டும் அதனால் தான். 

ரெக்டங்கிள் பாடி டைப்:

இந்த மாதிரி பாடி டைப் உள்ளவர்களின் அளவுகள் சோல்டர் டெஸ்ட் வேஸ்ட் ஹிப்ஸ் என்று எல்லா அழகுகளையும் ஒரே மாதிரி தான் இருக்கும் .அதனால் அவர்கள் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இவர்களும் சாரீஸ் செலக்ட் பண்ணும் போது திக்கான துணி உள்ள மாதிரி செலக்ட் பண்ணுவது சிறந்தது. சாரீஸ் இரண்டு சைடும் பெரிய பார்டர் உள்ள மாதிரி சாரீஸ்களை செலக்ட் பண்ணலாம். ஆர்ட் சில்க் சாரி, சில்க் சாரீஸ் , காட்டன் சாரீஸ் மற்றும் பார்டர் பெரியதாக உள்ள மாதிரி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். பிளவுஸ்களும் ஹெவி வொர்க் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளவும் . 



இவர்களுக்கும் பஃப் ஸ்லீவ், 3/4ஸ்லீவ், முழு ஸ்லீவ் போன்றவை பொருத்தமாக இருக்கும். சாரி பிளிட் அதிகமாக வைத்து  கட்டும் போது மேல்பகுதி, கீழ்ப்பகுதி இரண்டும் ஒரே மாதிரி தெரியும் . அதே மாதிரி ஷேப்வியர் பயன்படுத்தாமல் சாதாரணமான காட்டன் இன்ஸ்கர்ட் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். சில்க் சாரி, ஒர்க் அதிகம் உள்ள பிளவுஸ் சேர்த்து கட்டும்போது வேஸ்ட் பெல்ட் நீங்கள் பயன்படுத்தினால், உங்களை இன்னும் அழகாக காட்டும். ஏனென்றால் ,அப்பர் மற்றும் லோயர்  பகுதி ஒரே மாதிரி இருப்பதினால் அது  உங்களுக்கு  ஹிப்பை வளைவாக மாற்றி வேற மாதிரி லுக் கொடுக்கும்.

ஹவர் கிளாஸ் பாடி பைப்:

இந்த மாதிரி பாடி டைப் உள்ளவர்கள் மிகவும் லக்கியானவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இவர்களுடைய  சோல்டர் செஸ்ட் ,வேஸ்ட், ஹிப் இந்த அளவுகள் எல்லாம் கரெக்டாக  இருக்கும். அதனால் இவர்களுக்கு எல்லா விதமான சாரியும் சூப்பராக இருக்கும். சில்க் சாரி, காட்டன் சாரி ஷிஃபான் சாரி இப்படி எந்த விதமான சாரியும் இந்த பாடி ஸ்ட்ரக்சர் உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். 



சாரி பார்டர் இருந்தாலும் சரி, இல்லாட்டினாலும் சரி எந்த மாதிரியான சாரியும் இவர்களுக்கு   கட்டினாலும் நல்ல ஒரு லுக் கொடுக்கும். அதனால் இவர்கள் மேல்பகுதி ,கீழ்ப்பகுதி என இரண்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் சாரியை  செலக்ட் பண்ணினால் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் இவர்களை மேலும் அழகாக காட்டுவதற்கு இவர்களும் ஹிப் பெல்ட் யூஸ் பண்ணினால் சூப்பராக இருக்கும். எல்லாவிதமான ஸ்லீவும் இவர்களுக்கு பொருந்தும்.