பிரியாணி கூட இந்த காம்பினேஷன் சேர்ந்தா அல்டிமேட்டா இருக்கும்.. எது தெரியுமா?

vanitha
Feb 12, 2024,03:52 PM IST

சென்னை: ஹலோ தோழிகளே வீக்கெண்ட் எல்லாம் எப்படி போச்சுங்க. இன்னிக்கு திங்கள் கிழமைதான்.. நான் வெஜ் பத்திப் பேசக் கூடாதுதான்.. ஆனாலும் இதைச் சொல்லாமல் இருக்கு முடியலைங்க.. அப்படிப்பட்ட ரெசிப்பி இது.


வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நான் வெஜ் இல்லாத சமையலே நம்மில் பெரும்பாலான வீடுகள்ல இருக்காது. சண்டேன்னாலே "ப்யூர் நான் வெஜ்" தான். அதுவும் பிரியாணி தான். பிரியாணி நம்ம உணர்வோட கலந்த ஒன்று ஆயிடுச்சுங்க.. அது நம்மளோட உரிமை அப்படிங்கிற மாதிரி ஆகி விட்டது!


பிரியாணியில் பல வெரைட்டி இருக்குங்க. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பிரான் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, வெஜ் பிரியாணின்னு.. ஆனா, பிரியாணி கூட சேர்த்து சாப்பிட சில  காம்பினேஷன்ஸ் இருக்குங்க.. சிக்கன் 65, தயிர் வெங்காயம் கத்திரிக்காய் கிரேவி, தால்சா அப்படின்னு! அந்த வரிசையில இப்ப ட்ரெண்டா இருக்கிற காம்பினேஷன் என்ன தெரியுமா தோழிகளே? பிரியாணி வித்  பிரட் அல்வா தாங்க. ஆஹா நினைக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதா?.. சாப்பிட்டுப் பார்த்தீங்கன்னு வைங்க.. ச்சும்மா "டெட்லி"யா இருக்கும்.. அப்படிப்பட்ட காம்போ இது.




முன்னெல்லாம் ஏதாவது கல்யாண வீடுகள்ள இந்த பிரெட் அல்வா ஸ்வீட்டுக்காக பரிமாறுவாங்க. ஆனா இப்போ எந்த ஹோட்டல்ல ஆர்டர் பண்ணாலும் சரி, இல்ல சாப்பிட போனாலும் சரி பிரியாணி கூட தர  மெயின் சைடு டிஷ் இதுதாங்க. இன்னைக்கு இந்த பிரட் அல்வாவை வீட்டிலேயே ஈஸியா எப்படி செய்றதுன்னு சொல்றேன்ங்க!


பிரெட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்


பிரட் துண்டுகள்-6

பால் -1/2 லிட்டர் (காய்ச்சியது)

சர்க்கரை- 1/4 கப் (200 கிராம்)

நெய் -4 ஸ்பூன்

ஏலக்காய் தூள்- சிறிதளவு

முந்திரி- சிறிதளவு


செய்முறை: முதல்ல ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், கட் பண்ணி வச்சிருக்க பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமா வர்ற வரைக்கும் வறுக்கவும். நன்கு கலர் மாறினதும் அந்த பிரட் துண்டுகள் மேல காய்ச்சின பால் ஊற்றி நன்கு கிளறி விடவும். பிரட்டுகள் நல்லா பாலில் வெந்து மசிந்ததும் சர்க்கரையை சேர்க்கவும். 


அடுப்பை சிம்மில் வைத்து பிரட் சக்கரை கலவை நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும், சிறிது ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால் பிரட் அல்வா வீட்டிலேயே தயார். செய்கிற நேரமும் குறைவுங்க. குவான்டிடியும் அதிகமா இருக்கும். கடைகளில் வாங்கும் பிரட் அல்வா ரொம்ப கம்மியாவும் இருக்கும். விலையும் அதிகம். வீட்டில் உள்ள நான்கு பொருட்களை வைத்து ஈஸியா செஞ்சிடலாம்.




அப்புறம் என்னங்க வீட்ல பிரியாணி செஞ்சு அது கூடவே பிரெட் அல்வா பண்ணி உங்க வீட்ல இருக்கவங்களுக்கு கொடுத்து அசத்துங்க. ஓகேவா..  மீட் யு சூன் ப்ரண்ட்ஸ்!


புகைப்படம்: செளந்தரபாண்டியன்