Thirukarthigai festival.. திருக்கார்த்திகை 2024 : வீட்டில் எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா?
சென்னை : கார்த்திகை மாதம் என்றாலே வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது தான் நினைவிற்கு வரும். சிவ பெருமானும், மகாவிஷ்ணுவும் ஜோதி வடிவமாக காட்சி தந்தது கார்த்திகை மாதத்தில் தான் என்பதால் அவற்றை நினைப்படுத்தும் விதமாக கார்த்திகை மாதத்தில் இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் வழக்கம் உள்ளது. சிலர் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களும் வீட்டின் நிலை வாசல், பூஜை உள்ளிட்ட பல இடங்களில் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
பெரும்பாபாலானர்கள் திருக்கார்த்திகை தீபத் திருநாளான, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்து வரும் நாள் துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டின் வாசல் துவங்கி, பல இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். பொதுவாக திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் இருக்கும் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றிய பிறகு, அதை தரிசித்து விட்டு தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். திருக்கார்த்திகை அன்று வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மட்டும் தான் பலருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. ஆனால் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும் என்றும் கணக்கு உள்ளது. திருக்கார்த்திகை அன்று வீட்டில் எத்தவை தீபங்கள் ஏற்ற வேண்டும், எந்தெந்த இடங்களில் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் முறை :
1. முற்றம் அல்லது வீட்டின் ஹால் 2 தீபங்கள் ஏற்றி வைப்பதால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
2. வாசலில் கோலமிட்டு அதன் மீது 5 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
3. வீட்டிற்கு வெளியில் ஒரு தீபம் முன்னோர்களு மோட்சம் கிடைக்க யம தீபம் ஏற்ற வேண்டும்.
4. பூஜை அறையில் சாமி படங்களுக்கு கீழ் 2 தீபம் ஏற்ற வேண்டும்.
5. நிலை வாசற் படியில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
6. திண்ணை, மாடம் இருந்தால் 6 தீபங்கள் ஏற்ற வேண்டும். இல்லாதவர்கள் ஜன்னல்களில் ஏற்றலாம்.
7. வீட்டின் பின்புறத்தில் 3 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
8. சமையல் அறையில் 2 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
9. வாசலில் உள்ள படிகளில் 4 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
10. அப்பார்மென்டில் இருப்பவர்கள், வீட்டின் பின்புறம் இல்லாதவர்கள் பால்கனியில் தீபம் ஏற்றலாம்.
தலைவாசல் துவங்கி, பின் வாசல் வரை மொத்தமாக 27 தீபங்களை வீடுகளில் ஏற்ற வேண்டும். வீடுகளின் அமைப்பிற்கு ஏற்ப வைக்கும் இடங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் 27 என்ற எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றுவதே சரியான முறை. இந்த 27 தீபங்களும் 27 நட்சத்திரங்களை குறிப்பதாகும். இந்த 27 நட்சத்திரங்களுக்குள் 12 ராசிகள், 9 கோள்கள் ஆகியவை அடக்கம். அதாவது அண்ட சராசரங்கள் அனைத்திலும் ஒளி வடிவமான இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்தும் தத்துவமாக இந்த 27 தீபங்களை ஏற்ற வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்