லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.. பாவக்காய் கறி மசாலா ஃப்ரை.. கால் மணி நேர குக்கிங்தான்.. செம டேஸ்ட்ட்டி!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கால் மணி நேர குக்கிங்தான்.. ஈஸி அண்ட் ஃபாஸ்ட் குக்கிங்.. என்னங்க சொல்றீங்க அப்படீன்னு கேக்கறீங்களா.. அது என்னன்னு பாத்தீங்கன்னா.. அதுதான் பாவக்காய் கறி மசாலா ஃப்ரை, சிஸ்டர்ஸ்.
செம டேஸ்ட்டா இருக்கும்.. சத்தானதும் கூட.. அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.. சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியில் இதுக்கும் முக்கிய இடம் உண்டு.. என்ன சாப்பிடலாமா.. அதுக்கு முன்னாடி வாங்க சமைக்கலாம்!
தேவையான பொருட்கள்
பாவக்காய் 4
கடலை எண்ணெய் பொறிப்பதற்கு ஏற்ப
கரம் மசாலா தூள் 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
கான்பிளார் பவுடர் ஒரு ஸ்பூன்
செய்முறை
1. பாவக்காய் கழுவிக்கொண்டு கட் செய்யவும்
2. கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள் கார்ன்ஃப்ளார் பவுடர் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக கலக்கவும்
இந்த பேஸ்ட்டை ஒவ்வொரு பாற்காயில் தடவி விடவும்
3. சிறிது எண்ணெய் ஊற்றி கடாயில் ஒவ்வொன்றாக வறுக்கவும்
4. சூப்பரான மொறு மொறு பாவற்காய் வறுவல் ரெடி. இது சாம்பார் சாதத்துடனும் தயிர்சாதத்துடனும் ரசம் சாதத்துடனும் அருமையான சைடு டிஷ்.