"வி" சென்டிமென்ட்டை விட்டு விட்டாரா அஜீத்.. ஆதிக் மேல இம்புட்டு நம்பிக்கையா.. வேற லெவலா இருக்கே!

Su.tha Arivalagan
Mar 19, 2024,05:31 PM IST

- அஸ்வின்


சென்னை: சமீபகாலமாக வி சென்டிமென்டில் தலைப்பு வைத்துக் கொண்டிருந்த அஜித் தற்பொழுது நடிக்கப் போகும் குட் பேட் அக்லி படத்தில் அதை கைவிட்டு உள்ளார். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் அஜீத். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் ஆரம்பித்து 2025 ஜனவரி பொங்கல் அன்று  வெளியாக உள்ளது. மார்க் ஆண்டனி என்ற 100 கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் கைகோர்ப்பது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.




வாலி, வில்லன், வரலாறு, வீரம், வேதாளம், வலிமை, விவேகம், விஸ்வாசம் என்று வி சென்டிமென்டில் தலைப்பு வைத்து வந்த அஜித் தற்பொழுது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் கூட வி சென்டிமென்ட்டைத்தான் கடைப்பிடித்துள்ளார். ஆனால் தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கப் போகும் புதிய படத்தின் தலைப்பு முற்றிலும் ஆங்கில தலைப்பாக அமைந்துள்ளது. குட் பேட் அக்லி என்ற இந்த தலைப்பு ஹாலிவுட் திரைப்படத்தைப் போல ஆதித் எடுக்க விரும்புகிறாரா என்று நம்மை யோசிக்க வைத்துள்ளது.


அஜித்துக்கு பெரிய ஹிட் கொடுத்த படங்கள் எல்லாமே வி எழுத்தில்தான் தலைப்பு அமைந்திருக்கும். தற்பொழுது அந்த வி சென்டிமென்ட்டை அவர் விட்டுள்ளார் என்றால் சற்றே யோசிக்க வேண்டியுள்ளது. மகிழ் திருமேனி, விடாமுயற்சி திரைப்படத்தை மிக மிக நிதானாக எடுத்து வருகிறார். இதனால் ரசிகர்களே வெறுத்துப் போயுள்ளனர். படத்தை அவர் தாமதமாக எடுத்து வந்ததால்தான் அஜித் இந்த முடிவை எடுத்தாரா என்று பலரும் கேட்கிறார்கள். 


குட் பேட் அக்லியை குறுகிய காலத்திலேயே படமாக்கி, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஆதிக் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளது ரசிகர்களையும் ஹேப்பியாக்கியுள்ளது. ஆதிக்கின் இந்த சுறுசுறுப்பு அஜித்தை மகிழ வைத்திருக்கிறது. அஜீத்துக்கு விடாமுயற்சி மீது ஆர்வம் குறைந்து விட்டதாக கருதுகிறார்கள் ரசிகர்கள். ஆதிக்கின் படத்தையாவது வேகமாக எடுக்கலாமே என்றும் அஜீத் நினைக்கிறாராம்.


அஜீத் - ஆதிக் தொடர்பு நேர் கொண்ட பார்வையில் தொடங்கியது. நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்திருப்பார். அங்கிருந்துதான் இவர்களின் நட்பின் முதல் புள்ளி தொடங்கியது. நேர் கொண்ட பார்வை சூட்டிங் இடைவேளையில் இருவரும் உரையாடியபோது ஆதிக்குக்குள் இருந்த ஒரு அருமையான இயக்குநரை அஜீத் உணர்ந்துள்ளார். அப்போதே,  அப்பொழுது ஆதிக்கிடம் ஏதாவது கதை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று அஜித் கேட்டாராம். அதை மனதில் வைத்துத்தான் அஜீத்துக்காகவே இந்த குட் பேட் அக்லியை உருவாக்கியுள்ளார். கதை அஜீத்துக்குப் பிடித்துப் போனதேல் உடனே ஒகே சொல்லி விட்டாராம்.




ஆதிக்கிடம்  அஜீத்துக்கு ரொம்பப் பிடித்தது அவரது சின்சியாரிட்டியாம். அதைப் பார்த்து பிரமித்துப் போய்த்தான், நீ பெரிய இயக்குனராக வேண்டும் என்று அப்பொழுதே ஆதிக்கை ஊக்குவித்திருக்கிறார் அஜீத். இதனால்தான் பூஸ்ட்டாகி மார்க் ஆண்டனி மாதிரியான அதிரடிப் படத்தை ஆதிக் துணிச்சலாக இயக்கியுள்ளார். உண்மையில் சொல்வதானால், அஜீத்த வைத்து எடுக்ககப் போகும் படத்துக்கான ஒரு டிரையல் போலத்தான் இந்தப் படத்தை டிரீட் செய்துள்ளார் ஆதிக் என்று சொல்கிறார்கள். இந்தப் படத்தின் வெற்றியால் கிடைத்த நம்பிக்கையில்தான் அஜித்திடம் அவர் கதையை ரெடி பண்ணி கூறியிருக்கிறார்.


படத்தின் டைட்டிலே பட்டாசாக இருப்பதால் படம் எந்த லெவலுக்கு இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டனராம்.