வெயில் அதிகரிக்கும்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே.. IMD Chennai எச்சரிக்கை

Su.tha Arivalagan
Feb 16, 2025,03:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்கள் சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது. வட தமிழ்நாட்டில் அதிகாலையில் பனி மூட்டம் தொடர்கிறது. அதேசமயம், பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.




இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.


அதேசமயம், அதிகாலையில் நி்லவும் பனிமூட்டம் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்ப நிலை 36.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்ப நிலையும் அதே கரூர் பரமத்தியில்தான், 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.