ஹலோ பாஸ்.. சொந்த வீடு வாங்க போறீங்களா?.. அப்ப 2024ல் உங்களுக்கு தான் ஜாக்பாட்!

Aadmika
Jan 04, 2024,07:21 PM IST

டில்லி : 2024 ம் ஆண்டில் வீட்டு கடனுக்கான இஎம்ஐ வட்டி விகிதம் 0.5 முதல் 1.25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது நடுத்தர மக்களை பெரிதும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


மத்திய ரிசர்வ் வங்கி 2022ம் ஆண்டு மே மாதம் முதல், 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை 2.5 சதவீதம் உயர்த்துள்ளது. உலக அளவில் பணவீக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பின் எதிரொலியாக இந்த வட்டி விகித உயர்வு நடைபெற்றது. இதனால் வங்கிகளும் வீட்டு கடன் உள்ளிட்டவற்றிற்கான வட்டியை உயர்த்தியது.


தற்போது பணவீக்கத்தின் நிலை சீரடைந்துள்ளது உலக அளவில் நல்ல விஷயமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ரெபோ வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் பலரும் கணித்துள்ளனர்.




2024ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஜூன் அல்லது ஜூலை மாதம் மிக முக்கியமானது. இந்த மாதங்களில் வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை ஆர்பிஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்படியான வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். இதனால் வட்டி விகித குறைப்பு பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்க உதவும் என்பதால் வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 


2024 ம் ஆண்டின் முதல் அரையாண்டில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு இஎம்ஐ சுமை குறையும். இதனால் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்படும் போது முதலீடுகள் அதிகரிப்பது வழக்கம் என்பதால் ரெபோ வட்டி விகிதத்தை குறைப்பது பற்றி ஆர்பிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.