மே 05 - இந்த நாளில் இவற்றை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க

Aadmika
May 05, 2023,09:04 AM IST

இன்று மே 05, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 22

சித்ரா பெளர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்

சந்திர கிரகணம், சமநோக்கு நாள்


மே 04 ம் தேதி இரவு 11.59 முதல் மே 05 ம் தேதி இரவு 11.33 வரை பெளர்ணமி திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 10.03 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.55 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை 

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


அன்னதானம் செய்வதற்கு, கல்வி பணிகளை துவங்குவதற்கு,கால்நடைகள் வாங்குவதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும். சித்ரா பெளர்ணமி தினம் அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற நாளாகும். சந்திர கிரகணம் என்பதால் கிரகண நேரத்தில் மந்திர ஜபம் செய்வது கோடி பலன்களை அள்ளி தரும்.


எந்த ராசிக்காரருக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்க போகிறது ?


மேஷம் - வரவு

ரிஷபம் - ஆரோக்கியம்

மிதுனம் - நம்பிக்கை

கடகம் - புகழ்

சிம்மம் - அதிர்ஷ்டம்

கன்னி - பெருமை

துலாம் - ஆசை

விருச்சிகம் - இன்பம்

தனுசு - எச்சரிக்கை

மகரம் - மறதி

கும்பம் - மகிழ்ச்சி

மீனம் - இரக்கம்