ஒகேனக்கலில்.. மீண்டும் நீர் வரத்து அதிகரிப்பு.. அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை!

Manjula Devi
Aug 12, 2024,04:46 PM IST

சென்னை:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால்  அருவிகளில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் கன மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கர்நாடகா அணிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்தது. இதன் எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால்  தொடர்ந்து அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்து நீர் வரத்தும் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்மட்டமும் மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு எல்லையான பில்லி குண்டுலுவில் நேற்று 20,000 கனடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து 30,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக 27 வது நாளாகவும் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்