அதானியை தொடர்ந்து ஹிண்டன்பர்க் வலையில் சிக்கப்போவது யார்?: அடுத்த ஷாக்கர்!
Mar 23, 2023,12:03 PM IST
புதுடெல்லி: அதானி குழுமம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம், மற்றொரு புதிய நிறுவனம் பற்றிய அறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரான கவுதம் அதானி, மின்சாரம், ஏர்போர்ட், துறைமுகம் போன்ற பல துறைகளில் கால் பதித்து, வெற்றியும் கண்டார். அதானி குழுமத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டில் இருந்தும் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இவரது நிறுவனங்களின் பங்குகளும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. அதானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது. இந்திய பணக்காரர், ஆசிய பணக்காரர் என படிப்படியாக வளர்ந்து, உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடம் வரை அசுர வளர்ச்சி கண்டிருந்தார். அவரின் வளர்ச்சிக்கு பேரிடியாக விழுந்தது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை.
ஆய்வறிக்கையால் வீழ்ச்சி
வரி முறைகேடு, செயற்கையாக பங்கு விலையை ஏற்றியது, சொந்தங்களுக்கு முக்கிய பதவி, அதீத கடன் என அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம். மொத்தம் 413 பக்கங்களை கொண்ட இந்த ஆய்வறிக்கை தான், அதானியின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது. அறிக்கை வெளியான ஒரே வாரத்தில் அதானி குழுமத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது.
அரசியல் தாக்கம்
உலகின் 2வது பணக்காரராக ஜொலித்த கவுதம் அதானி, 35வது இடத்துக்கும் கீழ் தள்ளப்பட்டார். இந்த சரிவில் இருந்து மீளமுடியாமல் திணறிய அதானி நிறுவனங்கள் இப்போதுதான் ஓரளவு மீண்டு வருகின்றன. இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்தின் மீது பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை அமைக்க வலியுறுத்தி பார்லி.,யின் இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
அடுத்த அறிக்கை