கொழுப்பு குறையலையா.. வெயிட்டைக் குறைக்க வெறியா இருக்கீங்களா.. அப்ப இது உங்களுக்குத்தான்!

Manjula Devi
Jun 30, 2024,01:30 PM IST

நவீன மயமான இந்த காலகட்டத்தில் உடல் பருமன் என்பது கடும் சவாலாக இருந்து வருகிறது. வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் என அனைத்தும் முற்றிலும் மாறி உள்ளது. இது தவிர வெளிநாட்டுக் கலாச்சாரங்களை பின்பற்றி வருவதாலும் பலவித நோய்களையும் சந்திக்க நேரிடுகிறது. பண்டைய காலங்களில் நாம் உணவு சமைக்க வேண்டும் என்றால் தினசரி கை கால்களுக்கு பயிற்சி செய்வது போல் அம்மியில் அரைப்பது, உரலில் மாவு ஆட்டுவது,  கைகளால் துணியை துவைப்பது, இப்படி பலவித வேலைகளை செய்தோம். அதனால் தான் அப்போது எந்த நோய்களும் அண்டாமல் உடல் பருமன் என்ற ஒன்று இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தோம்.  அதாவது உடல் உழைப்பு இருந்ததால் உடலுக்கு நல்ல வேலை கிடைத்தது.


தற்போது நிலைமை மாறி விட்டது. கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் மிஷின்களே செய்கின்றன. அதனால் மனித உழைப்பு என்பது கணிசமாக குறைந்துள்ளது. இதனால் நம் சாப்பிட்ட உணவுகள் ஜீரணமாகாமல் நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறி உடல்  பருமன் அதிகமாகிறது.  இப்படி பலவித காரணங்களால் நாடு முழுவதும் பலர் உடல் பருமனால் கஷ்டப்படுகின்றனர்‌.


இந்த காலகட்டத்தில் உடல் பருமனாக இருப்பவர்கள் தாங்கள் அழகாக இல்லை எனவும், ஒல்லியாக இருப்பவர்கள் மட்டுமே அழகாக இருக்கிறார்கள் எனவும் நம் மனதில் தவறான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. ஏனெனில் உடல் பருமனாக இருப்பவர்கள் எந்த வேலையும் விரைவாக முடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதால் இது போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றனவா என்பது தெரியவில்லை.




சரி இந்த உடல் பருமன் எவ்வாறு அதிகரிக்கிறது தெரியுமா..?


நான் தினசரி உட்கொள்ளும் உணவுகள் முழுமையாக ஜீரணம் ஆகிறதா என்றால் கிடையாது. ஏனெனில் நாள் முழுவதும் மனித உடலுக்கு உழைப்பு என்பதே கிடையாது-அதனால் நாம் சாப்பிடும் உணவுகளில் ஜீரணமான உணவுகள் போக மீதமுள்ள கழிவுகள் நம் உடலில் தங்கி விடுகின்றன. அந்தத்  கழிவுகள் தான் நமது உடலில் கொழுப்பாக  தேங்கி விடுகிறது. இதனால் தான் நமது உடல் எடை கணிசமாக கூடுகிறது. உடல் பருமனால் தூக்கமின்மை, செரிமான கோளாறு, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, இதய நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகிறது. 


இதை எப்படி தடுக்கலாம்..?


முதலில் நம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். அதற்கு ஒரு சூப்பரான பானம் உள்ளது. அதை தினசரி பருகி வந்தால் கண்டிப்பாக கொழுப்பு குறையும், உடல் எடையும் குறையும்.   


தேவையான பொருட்கள்:


கருஞ்சீரகம்- 50 கிராம் 

வெந்தயம்- 50 கிராம் 

ஓமம்- 2 டேபிள் ஸ்பூன்


கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம், ஓமம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆறியதும் மிக்சியில் பொடி பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தினசரி இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அரை டீஸ்பூன் என்ற அளவில் வெந்நீரில் கலந்து தினமும் பருக வேண்டும். இதே போல மூன்று மாதம் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக உங்கள் எடை குறையும்.

 

இதுனால என்ன பயன்..?


கருஞ்சீரகம்:


கருஞ்சீரகம் ஆன்ட்டி ஆக்சிடென்டாக செயல்படும். இது கெட்ட கொழுப்பை குறைக்கும். இதனால் இதய நோய் வராமல் தடுக்கும். இது தவிர ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.


வெந்தயம்:

 

வெந்தயம் நம் வீட்டு அஞ்சறைப் பெட்டிகளில் உள்ள முக்கியமான பொருள்களில் ஒன்று. இது இயற்கையாகவே மருத்துவ குணம் கொண்டது. இதன் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் நன்மை பெரியதாக இருக்கும். அந்த வகையில் வெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவும். உடல் எடையை குறைக்க சீரான நிவாரணி.


ஓமம்:




ஓமம் வயிறு சம்பந்தப்பட்ட  வயிற்றுக் கோளாறு, வயிறு வலி, செரிமானமின்மை போன்றவற்றை நீக்கும் அருமருந்து. இது நமது உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இது நமது உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.


கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலந்த பொடியை நாம் தினசரி எடுத்துக் கொண்டால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். இதய நோய் வாயு, தொல்லை, நுரையீரல், சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். இது மட்டுமல்லாமல் சீரற்ற மாதவிடாய் இருக்கும். பெண்கள் மூன்று மாதங்கள் மட்டும் இந்த பொடியை எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக மாதவிடாய் சுழற்சி சரியாகும்.


தீமைகள்:

 

அமிர்தமாக இருந்தாலும் அளவாகத்தான் உண்ண வேண்டும். அதுபோல இந்தப் பொடியை அளவாக எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக நல்ல பலன் கொடுக்கும். மூன்று மாதங்களுக்கு மேல் இதனை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக குறைந்த ரத்த அழுத்த உள்ளவர்கள் இந்த பொடியை எடுத்துக் கொள்ளக் கூடாது.


குறிப்பு: இயற்கை வைத்தியத்தை கடைப்பிடிப்பதற்கு முன்பு உரிய நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.