ஆத்தாடி.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!
சென்னை: தங்கம் விலை இன்றும் ஓயவில்லை. உயர்ந்தே காணப்பட்டது. இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.400 உயர்ந்துள்ளது.
தீபாவளி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக ஏறுகின்றது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை ஏறுது என்ன செய்யலாம். வாங்குவோமா ?வேணாமா? என்று யோசித்து தங்கத்தை வங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சரி அதை விடுங்க.. இன்னக்கி விலை என்ன தெரியுமா..!
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5755 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 50 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46040 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6278 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 53 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.50224 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை நேற்றைய விலையிலேயே இன்றும் தொடர்கிறது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 596.80 காசாக உள்ளது.
தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போறது கிடையாது. என்ன தான் செய்யன்னு புலம்பிக்கிட்டே தான் நடுத்தர மக்கள் வாங்கிட்டு இருக்காங்க... தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை இந்த மாதம் முழுவதும் ஏற்றத்தில் தான் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.