அந்தப் பக்கம் பார்த்தா "ஹோ"ன்னு வெள்ளம்.. இந்தப் பக்கம் பார்த்தா "சோ"ன்னு மழை.. மதுரையில்!

Meenakshi
Nov 27, 2023,07:04 PM IST

மதுரை:  மதுரையில் இன்று மதியம் முதல் நல்ல மழை கொட்டித் தீர்த்து விட்டது. காலையில் இருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பின்னர் மழை வெளுத்து வாங்கியது.


மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் அவ்வப்பொழுது மழை பெய்து வருகின்றது. அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்பொழுது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தாலும் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் மிதமான மற்றும் கனமழை பெய்து வந்தது. மின்னல், இடி மற்றும் மேக மூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் மதியம் முதல் மலை வெளுத்து வாங்கி விட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது, சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மாலையில் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும் குழந்தைகள் மிகவும் சிரமத்தை சந்தித்தனர். இந்த திடீர் மழை பொது மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியதுடன் போக்கு வரத்து நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.


ஒரு பக்கம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்காக உள்ளது, மறுபக்கம் ஊருக்குள் மழை விட்டு வெளுத்ததால் மதுரை மாநகரமே குளிர்ந்து போய்க் கிடக்கிறது.