17 மாவட்டங்களுக்கு இன்று.. நாளை 11.. ஆகஸ்ட் 17ம் தேதி 13 மாவட்டங்களுக்கும் கன மழை எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Aug 15, 2024,03:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை மறு நாள் 13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:




ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று 17 மாவட்டங்களில் கன மழைக்கான எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.


16ம் தேதி நிலவரம் 




ஆகஸ்ட் 16ம் தேதியான நாளை நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


17ம் தேதி நிலவரம்




நீலகிரி, திருப்பூர், கோயம்பத்தூர், தேனி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கன மழைக்கான எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


18ம் தேதி நிலவரம்




ஆகஸ்ட் 18ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


19ம் தேதி நிலவரம்




ஆகஸ்ட் 19ம் தேதி கன மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நீலகிரி, கோயம்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி.