மக்களே உஷார்... 7 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது

Aadmika
Oct 01, 2023,04:33 PM IST

சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 


தமிழகத்தில் கோவை, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. சில பகுதிகளில் பகல் பொழுதிலேயே மழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. 


இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் தணியும் என்பது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், தொடர் விடுமுறை நாட்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.