தென் சென்னையில் ஏன் திடீர்னு இவ்வளவு பெரிய மழை தெரியுமா
Nov 03, 2023,11:15 AM IST
சென்னை: சென்னை நகரில் காலையிலிருந்து திடீரென அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்.
இதற்குக் காரணம் சென்னை விமான நிலையம் - ஆலந்தூர் -மடிப்பாக்கம் பகுதியில் கூடிய மிகப் பெரிய அளவிலான மேகக் கூட்டம்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் இதுவரை பெரிய அளவிலான மழையை சென்னை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்று காலை முதல் மழை விட்டு வெளுத்து வருகிறது. குறிப்பாக தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் சூப்பராக மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் கன மழைக்கு காரணம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், மடிப்பாக்கம், விமான நிலையம், ஆலந்தூர் பகுதிகளில் திறண்ட மிகப் பெரிய மேகக் கூட்டம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் மேகக் கூட்டம் திரண்ட காரணத்தால்தான் பெருமழை இந்தப் பகுதியில் கொட்டித் தீர்த்து விட்டது.