தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
Apr 03, 2025,06:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது‌.


அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, குமரி, நெல்லை, துத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.



சென்னை மழை:




சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


நாளை மறுநாள் கனமழை:


கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.



மாலை 5 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: 


சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர்,தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கோவை, ஈரோடு, நீலகிரி,தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 32 மாவட்டங்களில் இன்று மாலை 5 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.