தமிழ்நாட்டில் ... இன்று, மே 18 மற்றும் 19 .. 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலாட்..!
சென்னை: கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்றும்,மே 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று எங்கு மிக கனமழை:
தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக் கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து இந்த மூன்று மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கனமழை:
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 16) கனமழை:
திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (மே 17) கனமழை:
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,தர்மபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய 27 மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 18 மிக கனமழை:
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மே 18 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே 18 கனமழை:
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,தர்மபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தேனி,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், ஆகிய 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 19 மிக கனமழை:
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ஆகிய ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.