தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.. வானிலை மையம்
May 03, 2023,11:39 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில், மே 6ம் தேதி காற்றழுத்தம் ஏற்படும் என்றும் அது மே 7 அல்லது 8ம் தேதி தாழ்வு நிலையாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.