தமிழ்நாட்டில்.. 7 மாவட்டங்களில்.. நாளை கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Manjula Devi
May 31, 2024,03:39 PM IST

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  அறிவித்துள்ள நிலையில், நாளை தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனுடன் சேர்ந்து வெப்ப அலையும் வீசி வருகிறது.இதனால் மக்கள் செய்வதறியாமல் புலம்பி வருகின்றனர். இதற்கிடையே  தென்  தமிழக பகுதிகளிலும், கேரளாவிலும், ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க உள்ள தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே நேற்றே துவங்கிவிட்டது. இதனால் இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால், தற்போது தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 4 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். 


9 மாவட்டங்களில் நாளை கனமழை:


கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை:


திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அதிகரித்த வெப்ப நிலை சற்று தணியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.