அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு கனமழை இருக்காம்!

Su.tha Arivalagan
Sep 26, 2023,04:52 PM IST

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,கடலூர் ,

மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய பத்து மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.




தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.


மேலும் செப்டம்பர் 28 முதல் 30 வரை கோவை நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.