24ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு.. 21ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும்.. வானிலை மையம்

Manjula Devi
Oct 19, 2024,07:24 PM IST

சென்னை:  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


மேலும் வருகிற 21ம் தேதி வாக்கில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதனால் தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.




இன்று கன முதல் மிக கனமழை:


திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது‌. 


இன்று கன மழை:


 நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை கனமழை: 


தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


 நாளை மறுநாள்:


 கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


23.10.24:


தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 


24.10 2024: 


சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்