சாயங்காலம் என்ன பண்ணலாம்?.. ஈசியா செய்யலாம் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் - வேர்க்கடலை சாலட் ரெசிபி!
சென்னை: வணக்கம் பிரண்ட்ஸ்! என்னங்க, சம்மர் ஆரம்பிக்க போகுது? வெயில் இந்த வருஷம் என்ன பாடுபடுத்த போகுதுன்னு தெரியல.. மெதுவா வரட்டும், பார்ப்போம் வெயிட் பண்ணி. சரி, நான் வந்த விஷயத்தை சொல்றேன்.
எல்லோருக்கும் சாட் ஐட்டம்னாலே ரொம்ப பிடிக்கும். ஆனா அத அடிக்கடி வெளியில வாங்கி சாப்பிட கூடாது. சில பேர் என்னன்னா, டயட் இருப்பாங்க. ஆனா ஈவினிங் டைம்ல ஸ்வீட், காரம் என்று லிமிட் இல்லாம சாப்பிடுவாங்க. அதுக்கு தான் நான் இன்னைக்கு ஹெல்தியான ரெசிபியோட வந்து இருக்கேன். ஸ்கூல் முடிஞ்சு திரும்பவும் குழந்தைகள் முதல் ஆபீஸ் போயிட்டு வர்றவங்களுக்கு கூட செய்து கொடுக்கலாம். அது என்ன ரெசிபி என்றால் வேர்க்கடலை சாலட் தாங்க.
இதுவும் சாட் மாதிரி தான் இருக்கும். ஈஸியா செஞ்சிடலாம் பிரண்ட்ஸ், அதற்கு தேவையான பொருட்கள் என்னன்னு பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
வேர்கடலை (வேக வைத்தது) -1 கப்
கேரட் -2 (துருவியது)
பெரிய வெங்காயம் -2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி -1 (பொடியாக நறுக்கியது)
வெள்ளரிக்காய்-1 (துருவியது)
மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 ஸ்பூன்
சாட் மசாலா பொடி -1 ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
லெமன் -1/2 மூடி
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: வேகவைத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒரு மிக்சிங் பௌலில் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், வெள்ளரிக்காய் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அந்த கலவையில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சாட் மசாலா, லெமன் பிழிந்து நறுக்கிய கொத்தமல்லியை தூவி மிக்ஸ் பண்ணா போதுங்க, நல்ல டேஸ்டான பீனட் சாலட் தயாராயிடும். சாப்பிடுறதுக்கு ரொம்ப சுவையா இருக்கும். ஹெல்த்தியும் கூட!
வெயிட் லாஸ் பண்றவங்க கூட நிறைய எடுத்துக்கலாம். ரொம்ப பில்லிங்கா இருக்கும். சாட் மசாலா தூள் சேர்க்கிறதுனால அந்த வாசனையே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் என்னங்க, ஈவினிங் என்ன டிபன் செய்றதுன்னு யோசிச்சு வடை, பஜ்ஜின்னு செய்யாம இப்படி ஆரோக்கியமா செய்து பாருங்க, தோழிகளே.!
நெக்ஸ்ட் ஒரு ரெசிபியோட வரேங்க பை! பை!
புகைப்படங்கள்: செளந்தரபாண்டியன்