"சூப்களின் சூப்பர் ஸ்டார்".. வேற எதுங்க.. நம்ம பிரக்கோலி சூப்தாங்க.. செஞ்சு பார்க்கலாமா!

vanitha
Feb 06, 2024,06:36 PM IST

சென்னை: வணக்கம் பிரண்ட்ஸ்.. என்னங்க இருந்த எல்லா லீவு முடிஞ்சு போச்சு.. இனி மார்ச் ஏப்ரலில் எக்ஸாம் வந்துரும் பசங்களுக்கு. அவங்களுக்கு எக்ஸாம் டைம்ல காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி எல்லாம் வராமல் பார்த்துக்குறதுக்குள்ள, நம்மளுக்கு போதும் போதும்னு ஆயிருங்க.


அதுக்கு தான் நான் இன்னைக்கு ஹெல்தியான ஒரு சூப்பர் ரெசிபியோட வந்திருக்கேன். சூப்ல வெஜ், நான் வெஜ்ன்னு பல வெரைட்டி இருக்குங்க. நான் இன்னைக்கு சொல்ல போற சூப் ரெசிபி என்னன்னா ப்ரோக்கோலி சூப்தாங்க. 


ப்ரோக்கோலி அப்படின்னா என்னன்னு முன்னாடியெல்லாம் நமக்கு தெரியாதுங்க.. ஆனா இப்போ மார்க்கெட், கடைகள்னு எல்லா இடத்திலும் விக்கிறாங்க இந்த பிரக்கோலியை. இது வேற ஒன்னும் இல்லை மக்களே.. காலிபிளவர் மாதிரி பச்சை கலர்ல இருக்கும் .. இந்த காயை முன்னாடில்லாம் யாரும் அவ்வளவா வாங்க மாட்டாங்க. ஆனால் இதன் மருத்துவ நன்மைகள் தெரிஞ்சா நீங்க அடிக்கடி வாங்கி சமைப்பீங்க. 




முதல்ல இந்த ப்ரோக்கோலில என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் ஃபிரண்ட்ஸ்! அப்புறம் அதை வச்சு எப்படி ஈஸியா பண்ணலாம் சொல்றேன் தோழிகளே.


- கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.


- இதில் எளிதில் கரையும் நார்ச்சத்து உள்ளதால், வெயிட் லாஸ் பண்றவங்களுக்கு மிகவும் ஏற்றது.


- ப்ரோக்கோலியில் உள்ள மினரல்கள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் தன்மை உடையது.


- இதில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் கே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான மனநலம், ஞாபக சக்தி ஆகியவற்றிற்கு பெரிதும் உதவுதுங்க.


இப்படி ஏகப்பட்ட நன்மைகள் சொல்லிகிட்டே போலாங்க..  சரி இப்ப சூப்பர் ரெசிபிக்குப் போயிடலாமா!


தேவையான பொருட்கள்:


ப்ரோக்கோலி -  1 

பூண்டு- 4 பல்

தக்காளி-  1

சின்ன வெங்காயம்-10 

மல்லி விதை -1 ஸ்பூன்

மஞ்சள் தூள்-1/4  ஸ்பூன்

சீரகத்தூள்-1/2 ஸ்பூன்

மிளகுத்தூள் -1/2 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்

உப்பு- தேவைக்கேற்ப




செய்முறை: முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து, சுடு தண்ணீரில் போட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, மல்லி விதை, தக்காளி எல்லாம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மசாலா விழுதை போட்டு நன்றாக வதக்கவும். பின் சிறிதளவு மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் ப்ரோக்கோலி சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மீடியம் ஃபிளேமில் இரண்டு விசில் வந்ததும் இறக்கினால் ப்ரோக்கோலி சூப் தயார்.


கான்பிளவர் மாவு போன்று திக்கனிங் ஏஜென்ட் ஏதும் கலக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த சூப் பண்ணிரலாங்க. கொத்தமல்லி தூவி வெந்த ப்ரோக்கோலியோட இந்த சூப் சேர்த்து சாப்பிட்டு பாருங்க.. வேற லெவல்ல இருக்குங்க.. அப்புறம் என்ன, வரேன் தோழிகளே.. மீண்டும் சந்திப்போம்.


புகைப்படம்: சௌந்தரபாண்டியன்