Indigestion issues: உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கா? இதை ஃபாலோ பண்ணுங்க
சென்னை: இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக பலருக்கும் மிக சாதாரணமாக ஏற்படக் கூட பிரச்சனை, செரிமான கோளாறு பிரச்சனையாக தான் உள்ளது.
எதை சாப்பிட்டாலும் செரிக்க மாட்டேங்குது.. எப்ப சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை இருக்கு.. சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலேயே நெஞ்செரிச்சல் வந்துருது.. இப்படின்னு புலம்பும் பலர் இப்போது அதிகரித்து விட்டனர். நமது வாழ்க்கை முறை மாற்றம்தான் இதற்கு முக்கியக் காரணம்.
கண்டதையும் நாம் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டே இருக்கிறோம். அதனால் வரும் பிரச்சினைகள்தான் இவையெல்லாம். இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறது என்றால் இனி இந்த சிம்பிளான வழிகளை முயற்சி செய்து பாருங்கள்.
செரிமான பிரச்சனை சரியாக :
* உங்களுடைய நாளை நீருடன் துவங்குங்கள். தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனை மட்டுமல்ல, குடல் இயக்கமும் சீராகும்.
* நார்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
* புரோபயாடிக் நிறைந்த யோகட் போன்ற உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை தூண்டி, எளிதில் ஜீரணமாக தூண்டுகிறது.
* நன்கு பற்களால் அரைத்து கடித்து, சாப்பிட்ட பிறகு உணவுகளை விழுங்க வேண்டும்.
* குறைவாக, அதே சமயம் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு பசித்த பிறகே சாப்பிட வேண்டும்.
* எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய, அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* எப்போதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருங்கள். உடற்பயிற்சி, சாப்பிட்ட பிறகு குட்டி வாக்கிங் போன்றவற்றை செய்ய வேண்டும்.
* மனஅழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் சுரக்கும் சுரப்பிகள் செரிமானத்தை பாதிக்கும். இதற்கு தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்