ஹேப்பி நியூஸ்.. வடக்கு வங்ககடலில் உருவானது.. காற்றழுத்த தாழ்வு.. 20 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Manjula Devi
Oct 04, 2024,06:13 PM IST

சென்னை:   வடக்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டில் இன்று  20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேனும் மகிழ்ச்சியைக் கூட்டியுள்ளார்.


மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் அநேக இடங்களில் கடந்த ஒரு சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கப்படுவதாக கணிக்கப்பட்ட நிலையில், வடக்கு வங்கக்கடல் பகுதியில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




அதன்படி தற்போது வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரைப் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 9 ஆம் வரை தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 3 மணி நேரத்தில்:


 மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.


இன்று கனமழை:


புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, ஆகிய 20 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை கனமழை (5.10.24):


புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கடலூர், ஈரோடு, சேலம், மயிலாடுதுறை, ஆகிய 13 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை மறுநாள் (6.10.24):


ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை, ஆகிய 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக்டோபர் 7.10.24: 


கடலூர்,அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, ஆகிய 14 மாவட்டங்களில் அக்டோபர் 7ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக்டோபர் 8:


வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர்,சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, கோவை, திண்டுக்கல், தேனி, ஆகிய 16 மாவட்டங்களில் அக்டோபர் எட்டாம் தேதி  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அக்டோபர் 9ஆம் தேதி:


கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 11 மாவட்டங்களில் அக்டோபர் 9ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:


சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்