ஆகஸ்ட் 05 - தடைகள் விலக அனுமனை வணங்க வேண்டிய நாள்
இன்று ஆகஸ்ட் 05, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி - 20
கரிநாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
மாலை 03.37 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 10.44 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும் பிறகு காலை 10.44 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள்?
உழவு செய்வதற்கு, சமையல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தர்மம் செய்வதற்கு, வாகன பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சனிக்கிழமை என்பதால் காரியத் தடைகள் விலக ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.