அனுமன் ஜெயந்தி 2024.. இப்படி வழிபட்டால் நிச்சயம்.. வீரம், பலத்தின் நாயகன் அனுமனின் அருள் கிடைக்கும்!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : ராம பக்தி, வீரம், பலம் ஆகியவற்றிற்கு உதாரணமாக சொல்லப்படுபவர் அனுமன். ராம நாமத்தில் மகிமையை இன்ற வரை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருப்பவர் அனுமன். அவரின் அவதார தினத்தையே அனுமன் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். அனுமன் மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
2024ம் ஆண்டின் துவக்கத்தில் ஏற்கனவே ஒரு அனுமன் ஜெயந்தி கொண்டாடி விட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக டிசம்பர் 30ம் தேதியான இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு துவங்கி, டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 01.12 வரை அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்து உள்ளன. இதனால் டிசம்பர் 30ம் தேதி நாள் முழுவதும் அனுமன் ஜெயந்தி வழிபாட்டினை செய்யலாம்.
இந்த நாளில் கோவிலுக்கு சென்று துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய், வடைமாலை அணிவித்து அனுமனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் அனைதஅது நன்மைகளும் கிடைக்கும். அனமன் எப்போதும் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பவர். இந்த நாளில் அனுமன் சாலிசா, சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபடுவது மிக மிக நல்லது.
படிக்கும் குழந்தைகள் படிக்கும் விஷயங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளவும், நிலையான வேலை, பதவி, புகழ்,செல்வம் கிடைக்க மனதார அனுமனை வழிபடலாம்.
வீட்டில் எப்படி பூஜை செய்வது :
அனுமன் படம் இல்லாதவர்கள் பூஜை அறையில் பெருமாள் படம், ராமர் பட்டாபிஷேக படம் ஆகியவற்றில் அனுமன் அமர்ந்திருப்பார். அல்லது ராமர் படம் வைத்து வழிபடலாம். இவை எதுவும் இல்லை என்றாலும் " ஸ்ரீ ராம ஜெயம்" என்று மாக்கோலம் போட்டு, மனதார அவரை நினைத்து வழிபடலாம்.
1. வாசனை மலர்கள், பன்னீர் ரோஜா, மல்லி, இராமர் பானம் என்ற மல்லிகை வகைகளில் ஒன்றான மலர்களை படைத்து வழிபடலாம்.
2. நைவேத்தியமாக பழ வகைகளில், வாழைப்பழம், கொய்யா, சப்போட்டா ஆகியவற்றை படைத்து வழிபடலாம். அதோடு, வெண்ணெய், வடை. சுண்டல், அவல், பொங்கல் என நம்மால் எது முடியுமோ அவற்றை படைத்து வழிபடலாம்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
"அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்."
"நன்மை செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமா வென இவ்விரண்டெழுத்தினால்"
இந்த மந்திரங்களை சொல்ல முடியாதவர்கள் "ஸ்ரீராம ஜெயம்", "ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்" ஆகிய மந்திரங்களை சொன்னாலே அனமனின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். பூஜையில் நெய் விளக்கேற்றி, நைவேத்தியம் வைத்து தீப தூப ஆராதனை காட்டி வழிபட்டு, அனுமனை வழிபடுவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்