அடுத்த 24 மணி நேரத்தில்.. 10 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. குடையோட வெளில போங்க!

Su.tha Arivalagan
Oct 31, 2023,06:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 


இலங்கை மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சியை மழையை ஒட்டிய பகுதிகளான கிருஷ்ணகிரி ,சேலம் , திருப்பத்தூர் ,மதுரை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் தேனி தர்மபுரி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




தற்போது மூன்று நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.  எனவும்  நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், இன்றுடன் அக்டோபர் மாதம் முடியும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழையின் அளவு 98மி.மீ பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில்  இயல்பு அளவு 121 மி. மீ ஆகும்.


தற்போது வடகிழக்கு பருவமழையானது இயல்பு அளவைவிட 43 சதவீதம் குறைவு. இது 123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் குறைவாக பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை எதுவும் இல்லை . சென்னையைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


மேலும் இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது நிலையாக இல்லை. காற்றில் ஈரப்பதம் ஈரப்பதமின்மையால் தற்போது காற்று கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு நடக்கும் போது இதுபோல மழை விட்டு விட்டு தான் செய்யக்கூடும். நவம்பர் மாதத்திற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிடப்படும் என சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.