விஸ்வரூபம் எடுக்கும் கிராசிம் டெக்ஸ்டைல்ஸ்..  120 கிளைகள் திறக்க முடிவு!

Su.tha Arivalagan
Sep 10, 2023,02:20 PM IST
கொல்கத்தா: கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜவுளிப் பிரிவானது அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் சிறு நகரங்களில் 100 முதல் 120 கிளைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனம்தான் கிராசிம். இந்த நிறுவனம் தனது பிசினஸை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பெரு நகரங்களில் கிராசிம் நிறுவனத்தின் சுவடுகள் அழுத்தமாகவே உள்ளன. அடுத்து சிறு நகரங்களிலும் வர்த்தகத்தை கைப்பற்ற கிராசிம் தீர்மானித்துள்ளது.



அடுத்த 2 ஆண்டுகளில் 100 முதல் 120 சில்லறை விற்பனை கிளைகளைத் தொடங்க கிராசிம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.  இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சத்யாகி கோஷ் கூறுகையில்,  எங்களது வெற்றிக் கதை குறித்து நாங்கள் பாசிட்டிவான எண்ணத்தில் இருக்கிறோம். மொத்த வணிகம் மட்டுமல்லாமல் சில்லறை விற்பனை வர்த்தகத்திலும் நாங்கள் விரிவாக்கம் செய்யவுள்ளோம்.

அடுத்த 2 ஆண்டுகளில்  இந்தியாவின் சிறு, குறு நகரங்களில் 100 முதல் 120 லினன் கிளப் சில்லறை விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.