மணிப்பூர் முதல்வரை ஏன் இன்னும் டிஸ்மிஸ் செய்யவில்லை .. காங்கிரஸ் கேள்வி

Su.tha Arivalagan
Aug 08, 2023,01:32 PM IST
டெல்லி: மணிப்பூரில் கலவரம் மிகப் பெரிய அளவில் வெடித்தும் இதுவரை ஏன் அந்த மாநில முதல்வரை டிஸ்மிஸ் செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் இன்று தொடங்கியது.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் முதலில் விவாதத்தைத் தொடங்க சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் இளம் எம்பி கெளரவ் கோகோய் முதலில் விவாதத்தைத் தொடங்கிப் பேசினார்.

அவரது பேச்சின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 கேள்விகளை முன்வைத்தார்.

1. ஏன் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மணிப்பூருக்குச் செல்லவில்லை?
2. மணிப்பூர்  மாநிலமே பற்றி எரிந்து வந்த நிலையில் அதுகுறித்துக் கருத்து தெரிவிக்க 80 நாட்களை பிரதமர் மோடி எடுத்துக் கொண்டது ஏன்?
3. மணிப்பூர் முதல்வரை ஏன் இதுவரை டிஸ்மிஸ் செய்யவில்லை?

தொடர்ந்து கோகோய் பேசுகையில், நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மெளன விரதம் கடைப்பிடித்து வருகிறார். இதனால்தான் நாங்கள் அவரது மெளனத்தை உடைக்க நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர நேரிட்டது.  எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றார் அவர்.