ம்ஹூம்.. இன்னிக்கும் குறையல.. தொடர் உயர்வில் தங்கம்.. இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு!
சென்னை: தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வே காணப்படுகிறது. நேற்று உயர்ந்த தங்கம் இன்றும் உயர்ந்தே உள்ளது. நேற்று ரூ.520 உயர்ந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
நிலையற்ற விலையில் தங்கம் விலை உள்ளது. கடந்த வாரம் சவரனுக்கு ரூ.2000 குறைந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் இன்றும் உயர்ந்தே உள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த விலை உயர்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,740 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,920 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,353 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,824 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 ஆக உள்ளது. நேற்றும் இன்றும் சேர்ந்து சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது.
இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.3.50 காசுகள் உயர்ந்து ரூ.101 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.97,500 விற்கப்பட்டது இன்று ரூ.1,01,000 விற்கப்படுகிறது. ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.3,500 உயர்ந்துள்ளது.