Gold Rate: தொடர் சரிவில் தங்கம் விலை: சவரனுக்கு இன்று மட்டும்  ரூ.480 குறைவு!

Meenakshi
Feb 14, 2024,10:46 AM IST
சென்னை: கடந்த ஒரு வாரகாலமாக நகை விலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. அதுவும் இன்று மட்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை பிரியர்களிடம் மகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8ம் தேதியில் இருந்து தொடர்ந்து நகை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று மட்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு ...  என்னய்யா ஆச்சிரயமா இருக்கே. தை மாதத்தில் மட்டும் இல்லை, மாசியிலும்  தங்கம் விலை குறைவாக இருக்கிறதே என்று பலரும் வியக்கும் வண்ணம் உள்ளது. இது ஒரு புரம் இருக்க இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் வேறு இந்த நகை  விலை குறைவு  பெற்றோர்களுக்கு மட்டும் இல்லை காதலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்



இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5750 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 60 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46000 ரூபாயக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6273 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 65 ரூபாய் குறைவாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50,184 ஆக உள்ளது.

கடந்த ஒரு வாரமாக இருந்து வந்த ஒரு கிராம்  தங்கத்தின் விலை நிலவரம்

பிப்ரவரி 14 - 5750
பிப்ரவரி 13 - 5810
பிப்ரவரி 12 - 5830
பிப்ரவரி 11 - 5830
பிப்ரவரி 10 - 5830
பிப்ரவரி 9  -  5839
பிப்ரவரி 8  -  5840

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் குறைந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் குறைந்து ரூபாய் 75.50 ஆக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 604 உள்ளது. 10 கிராம் வெள்ளியின் விலை ரூ. 755 ஆக இருக்கிறது.

நாட்டில் பண வீக்கத்திற்கு முக்கிய காரணமாக நகை விலை கருதப்படுகிறது. நகையில் இந்திய மக்கள் அதிகளவில் பயன்படுத்தியும் முதலீடு செய்தும் வருகின்றனர். தங்கத்தில் முதலீடு என்பது பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக கருதி வருகின்றனர். இதனால் நகை வாங்கும்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனலாம்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலையில் இறக்கம் காண்பதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர். இந்த விலை குறைவு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.